லண்டனிலிருந்து கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசிய விமான நிறுவன (எம்ஏபி)த்தின் எம்எச்01 விமானம், மோசமான வானிலையில் சிக்கி அதிர்ச்சியால் குலுங்கியபோது இறந்துபோவோம் என்ற முடிவுக்கு வந்து விட்டார் மேரி என்ற பயணி.
சிங்கப்பூரரான அந்த 50-வயது மாது, ஏர்பஸ் 380 ரக விமானம் கீழ்நோக்கிப் பாய்ந்து பின்னர் மேல்நோக்கிச் செல்லத் தொடங்கியது என்றும் அது பயங்கரமான அனுபவம் என்றும் வருணித்தார்.
“கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தை (கேஎல்ஐஏ) அடைய மூன்று மணி நேரம் இருந்தபோது விமானம் ஆட்டம் காணத் தொடங்கியது.
“விமானம் குலுங்கத் தொடங்கியபோதுதான் விமானப் பணியாளர்கள் உணவு பரிமாறத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். (குலுங்கலில்) உணவுப் பொட்டலங்கள் உணவு- வண்டியிலிருந்து நாலாபுறமும் பறந்தன”, என்று மேரி கூறினார்.
“அப்போதுதான் வார்ப்பட்டைகளை அணிந்துகொள்ளச் சொல்லும் விமானியின் அறிவிப்பு வந்தது”, என்றவர் சொன்னார்.
விமானம் குறித்த நேரத்தில் மாலை 6.00 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறங்கியது. காயமடைந்த ஐவர் புத்ரா ஜெயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
.
ஒரு பிரதமரின் ஆட்சியில் மூன்று பயணிகள் விமான பேரிடரா ?
என்று மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து விட்டீர்களோ என நினைத்தேன்.
ஸ்ரீ! நீங்கள் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து விட்டீர்கள்! நான் கூட முன்று பயணிகள் பயணம் செய்த விமானப் பேரிடர் என்று நினைத்து விட்டேன்!
இரண்டொரு தமிழர்கள் இந்து மதத்தினர் அதில் payanam செய்ததால் டப்பீதீர்கள் இல்லயேல் நவகிரகங்கள் உடைப்பின் ethiroli உங்களை பலி எடுத்திருக்கும் நம்,பலா ? wait and C