பாலியல் தொழிலாளர்களாக உருமாறும் அகதிகள்: கிரேக்கத்தில் விலகாத துயரம்

pic01சிரியா மற்றும் ஆப்கான் நாட்டு அகதிகள் பலர் பிழைப்புக்காக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியா மற்றும் ஆப்கான் நாட்டினரான பல எண்ணிக்கையிலான ஆண்கள் கிரேக்கத்தில் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளும் பொருட்டு வெறும் 2 யூரோ பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.

ஏதென்சில் அகதிகளாக வந்துசேரும் இளைஞர்களும் தங்களது பணத் தேவைக்காக உடலை விற்கும் நிலைக்கு வெகு விரைவிலேயே தள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஏதென்ஸ் நகரின் சிவப்பு விளக்கு பகுதியான Fylis தெருவில்தான் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகம் நடப்பதாக கூறப்படுகிறது.

அகதிகளில் சிலர் வெறும் 30 யூரோ கட்டணத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். மற்று சிலர் மிக குறைவாக 2 யூரோ வரையில் பெற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்படுகின்றனர். பேரம் பேசும் தொழில் அல்ல தாங்கள் செய்து வருவது எனவும் அவர்கள் பரிதாபமாக தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி அகதிகளுக்கான கூடாரங்களிலும் இளம்பெண்களை பாலியல் தொழிலுக்கு நிர்பந்திப்பதாகவும், இது பெருவாரியாக ஐரோப்பா முழுவதும் நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான ஆண்கள் சூழல் காரணமாகவே இதுபோன்ற பாலியல் தொழிலுக்குஉடன்படுவதாக கூறும் நபர் ஒருவர், தாம் ஏதென்ஸ் விமான நிலையம் வந்திறங்கியதும் குறைகூறாத வகையில் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என்றே கருதியதாக கூறுகிறார்.

ஆனால் இங்குள்ள சூழல் போதை மருந்து விற்பனைக்கும் விபச்சாரத்திற்கும் தள்ளிவிடும் அபாயம் இருப்பதை உணர்த்தியதாக தெரிவிக்கின்றார்.

கிரேக்கத்தின் எல்லை திறந்திருந்ததே எங்களுக்கெல்லாம் நம்பிக்கை என தெரிவிக்கும் அவர் தற்போது கிரேக்க அரசும் எல்லைகளை மூடிவிட்டது, வேறு நாடுகளுக்கு செல்ல பணம் வேண்டும், வேறு வழி இல்லை, கட்டாயம் பணம் சேர்க்க வேண்டும், விபச்சாரத்தை விட்டால் வேறு வழியில்லை என பரிதாபமாகவும் மிகுந்த கோபத்துடனும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com