ஏழைகளுக்கு ஒரு லட்சம் கோழிகள்: உலக கோடீஸ்வரர் பில்கேட்ஸ் வழங்குகிறார்

bill-gatesஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ஏழைகளின் வறுமையை போக்க அவர்களுக்கு ஒரு லட்சம் கோழிகளை இலவசமாக வழங்கவுள்ளதாக உலகின் முதல் கோடீஸ்வரரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசொப்ட் நிறுவனரும் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான பில் கேட்சும் Heifer International என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

இதன் அடிப்படையில், ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனத்தை சுற்றி உள்ள நாடுகளை சேர்ந்த ஏழைகளுக்கு இந்த கோழிகள் வழங்கப்படவுள்ளன.

இந்த புதிய திட்டத்தை அமெரிக்காவில் இன்று தொடங்கி வைத்து பில்கேட்ஸ் பேசியுள்ளார்.

அப்போது, ‘குறிப்பிட்ட இந்த ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ஏழைகளின் ஆண்டு வருமானம் தற்போது 700 டொலராக இருக்கிறது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் 5 கோழிகள் வழங்கப்படும். இந்த கோழிகளை வளர்த்து பின்னர் விற்பனை செய்வதன் மூலம் அந்த குடும்பம் ஆண்டிற்கு 1,000 டொலர் வருமானம் ஈட்டும்.

ஒரு குடும்பத்திற்கு 5 கோழிகள் வழங்குவதால், எதிர்காலத்தில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்வதுடன் அவர்களின் வறுமையும் நீங்கி விடும்’ என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com