ரம்ளான் அழைப்பு மணி அடிக்கவில்லை- ஜேர்மனி முகாமையே கொழுத்தி எரித்த அகதிகளால் பரபரப்பு !

ஜேர்மனியில் டொசுல்டோப் நகரில் உள்ள அகதிகள் முகாம் பற்றி எரிகிறது. இதனை அங்குள்ள அகதிகளே கொழுத்தி விட்டதாக அறியப்படுகிறது. முஸ்லீம்களின் புனித வாரமான ரம்ளான் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ரம்ளான் தினங்களில் தமக்கு எச்சரிக்கை மணி அடிக்கவில்லை என்றும் நோண்பு முடிந்த பின்னர் தாம் பல மணி நேரம் காத்திருந்ததாகவும் அகதிகள் தெரிவித்துள்ளார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த அகதிகள் தாம் இருந்த அகதி முகாமை , நெருப்பு மூட்டியுள்ளார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் சுமார் 5,000 அகதிகளை ஜேர்மன் நாட்டு அதிபர் அஞ்சலா மேர்கிள் தனது நாட்டுக்குள் வர அனுமதித்தார். இது பல்வேறு விமர்சனங்களை தேற்றுவித்து இருந்தது.

குறித்த அகதிகள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில். அதனை உறுதிசெய்யும் வகையில் இன் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

-http://www.athirvu.com