கிழக்கு ஐரோப்பிய நாடுகளை 60 மணி நேரத்தில் பிடிக்கலாம்- புட்டின்

கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சுமார் 60 மணித்தியாலத்தில் ரஷ்யா கைப்பற்றிவிடும் என்று அமெரிக்க உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்து பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ரஷ்யா ஒரு காலத்தில் தனது கட்டுப்பாடினுள் கொண்டுவரும் என்ற அச்சம் நீண்ட நாட்களாக உள்ளது. இதன் காரணமாகவே நேச நாடுகள் என்ற படை அணி ஒன்றை அமெரிகா உருவாக்கி, சுமார் 33,000 ஆயிரம் படைகளை கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலை நிறுத்தி வைத்துள்ளது.

இன் நிலையில் குறித்த 33,000 படை மற்றும் ஏனைய அனைத்து நாடுகளின் படையணிகளை உடைத்து 60 மணித்தியாலத்தில் ரஷ்யா அனைத்து நாடுகளையும் கைப்பற்றும் சாத்தியம் உள்ளது என்கிறார் அமெரிக்க புலனாய்வு அதிகாரி. இவரின் கூற்று பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. நேச நாட்டுப் படையணிகள் பல்டிக் கடல் பகுதியில் பெருமளவில் நிலைகொண்டுள்ளார்கள். குறித்த இடத்தை பல தடவை ரஷ்ய வேவு விமானங்கள் வேவுபார்த்துவிட்டது.

இன் நிலையில் நேச நாட்டுப் படைகளை மேலும் வலுப்படுத்தவேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது. இது நடைபெறவில்லை என்றால் ரஷ்யப் படைகள் இலகுவாக பல நாடுகளை ஊடறுத்து கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் படைப்பலம் தற்போது மன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு. அவர்களின் விமானப் படை மற்றும் கப்பல் படையும் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு பலமாக உள்ளது.

-http://www.athirvu.com