50 பேரை கொன்று வெறியாட்டம் நடத்திய நபர் ஐ.எஸ் தீவிரவாதியா? அதிர்ச்சி தகவல்

pic01அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள Pulse என்ற ஓரினச்சேர்க்கையாளர் இரவு மதுவிடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 50 பேர் பலியாகியுள்ளதாகவும், 53 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 3 மணிநேரம் மதுவிடுதியை ஆக்கிரமித்துகொண்ட இந்நபரின் பிடியில் இருந்து, காயமடைந்தவர்களை பொலிசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 ஐஎஸ் அமைப்பு பொறுப்பு

இத்தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தாக்குதல் நடத்திய மர்மநபரின் பெயர் ஒமர் மேட்டின் எனவும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அவன், ‛911′ என ஐ.எஸ் இயக்கத்தால் அழைக்கப்பட்டான் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிசார் இந்நபரை சுட்டத்தில் இவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இந்நபர் குறித்து விசாரணை நடத்தியதில், புளோரிடா மாகாணத்தில், போர்ட் செயின்ட் லுாயிஸ் பகுதியில் வசித்து வந்த அவன், ஆப்கானிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவன் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஒமர் மேட்டினின் தந்தையிடம் நடத்திய விசாரணையில், தன் குடும்பத்தார் முன்னிலையில் ஆண்கள் இருவர் முத்தமிடுவதை கண்டு ஒமர் கடுங்கோபம் அடைந்ததாகவும், அது அவனை அதிகம் பாதித்தது எனவும் தெரிவித்தார்.

ஆனால், தங்களது மகனுக்கும் ஐஎஸ் அமைப்புக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்த தகவல் தெரியாது என கூறியுள்ளனர்.

 ஒபாமா கண்டனம்

அமெரிக்க வரலாற்றில் கொடூரமான சம்பவம் இன்று நடந்திருக்கிறது. ஓர்லாண்டோ நகர மேயரிடம் பேசினேன். அரசு சார்பில் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளேன்.

மக்கள், ஆடவும், பாடவும், பொழுது போக்கவும் வந்த இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வெறுப்பு ஒன்று தான் என்று கூறியுள்ளார்.

-http://news.lankasri.com