அன்றாட தேவைகளுக்கு கூட உடல்களை விற்கும் சிரிய அகதிகள்: எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் லெபனான்

pic02சிரியாவில் நடக்கும் யுத்தம் காரணமாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு, சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்கு படையெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து அரசாங்க படையினருக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது,

போர் நடந்தாலும் பராவாயில்லை, சிரியாவில் வாழலாம் என அம்மக்கள் நினைத்தால், ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்களை ஆக்கிரமித்து அவர்களை பாலியல் தொழிலுக்காக பயன்படுத்துகின்றனர்.

எனவே, அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக அண்டை நாடான லெபனானுக்கு சென்றால் அங்கு இவர்கள் படும் துயரங்கள் கல்மனதையும் கரையவைக்கிறது.

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்று, லெபனான் நாட்டு மக்கள் சிரியா அகதிகளை நடத்தும் விதம் மிகவும் கேவலமான முறையில் உள்ளது.

லெபனானில் 1.8 மில்லியன் சிரிய அகதிகள், தங்களது அன்றாட வாழ்கையின் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றிக்கொள்ள பணம் இன்றி அல்லப்படுகிறார்கள்.

இவர்கள், குடிக்கும் தண்ணீருக்கு கூட பணம் செலுத்தி தான் வாங்க வேண்டியுள்ளது, இதனையும் தாண்டி பரிதாபத்தை ஏற்படும் விடயம் என்னவென்றால், சிரிய அகதிகள் அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு வேலை கேட்டு சென்றால் அவர்களுக்கு வேலை கிடையாது.

அப்படி கொடுத்தாலும், அந்த குடும்பத்தில் உள்ள தந்தைக்கு வேலை தரமாட்டார்கள், அவர்கள் வேலை கொடுக்க முன்வருவது தாய்மார்களுக்கு, ஏனெனில் அவர்களை தங்களுடைய இச்சைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற நோக்கம் கருதியே ஆகும்.

இதற்கு அடுத்ததாக, சிறு குழந்தைகளை விவசாயம், தொழிற்சாலைகள் போன்றவற்றில் பயன்படுத்தி, அவர்கள் மூலம் கடின வேலைகளையும் செய்துமுடித்துவிடுகிறார்கள்.

சற்று வளர்ந்த பெண்பிள்ளைகளை, பெரிய வயதுடைய நபர்கள் கட்டாய திருமணம் செய்துகொள்கின்றனர், மேலும், இவர்களை பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்கு பாலியல் தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு கடையில் மளிகை சமான்கள் வாங்க வேண்டுமென்றால் கூட, அந்த கடையில் இருந்து மளிகை பொருட்களை கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக அந்த வீட்டின் பெண்களை ஆசைக்கு இணங்க அழைப்பார்கள்.

இப்பெண்களும் வேறு வழியின்றி பொருட்களை வாங்கிவிட்டு சென்றுவருவார்கள், மேலும் தாங்கள் குடியிருக்கும் வீட்டில் வாடகை செலுத்த சிரமப்பட்டால் கூட, இதே நிலமைக்கு தான் ஆளாகிறார்கள்.

தங்கள் சொந்த நாட்டில், ஐஎஸ் தீவிரவாதிகள் பிடியில் சிக்கினால், கழுத்தை அறுத்தும், பாலியல் சந்தைகளில் ஆடு மாடுகளை போன்று விற்கப்படுவதற்கு பதிலாக, இதுபோன்று வாழ்க்கை பரவாயில்லை என்ற போராட்டத்தோடு இம்மக்கள் வாழ்ந்து வருவதாக ஐநா தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் , 700,000 சிரிய அகதி குழந்தைகள் பள்ளி செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாக லெபனான் தெரிவித்துள்ளது.

மேலும், சிரிய அகதிகளுக்கு ஐநாவால் வழங்கப்படும் நிதி உதவி கூட செய்யமுடியாத அளவுக்கு ஐநாவின் கரூவூலம் வறட்சியடைந்துள்ளது என ஐநா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://news.lankasri.com