பாகிஸ்தானில் ரமழான் நோன்பு முடிவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்னதாக உணவு உட்கொண்ட குற்றத்திற்காக, 90 வயது இந்து முதியவரை பொலிசார் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
கோத்கி மாவட்டத்தில் ரமழான் நோன்பு முடிவதற்கு முன்னதாக உணவுப்பொருட்களை விற்பனை செய்தது மற்றும் உணவு உண்ட குற்றத்திற்காக கோகுல் தாஸ் (வயது 90) என்பவரை உள்ளூர் பொலிஸ் அதிகாரியான ஹுசைன் என்பவர் மிருகத்தனமாக தாக்கியுள்ளார்.
கோகுல் தாஸின் பேரன் வினோத் குமார், குறித்த பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு சமூக வலைதளங்களில் கண்டன பதிவுகள் தீவிரமானது. 90 வயது முதியவர் கோகுல் தாஸை கடுமையாக பொலிஸ் தாக்கிய புகைப்படத்தை அவருடைய குடும்பத்தார் வெளியிட்டு உள்ளனர்.
இதனையடுத்து குறித்த மாகாணத்தின் பொலிஸ் ஐ.ஜி ஹுசைனை கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-http://news.lankasri.com
அவனுக்கு ஒன்பது மாதக் குழந்தையும் ஒன்று தான்! தொண்ணூரு வயது பெரியவரும் ஒன்று தான்! அவர்களுக்கு வயது ஒரு தடை அல்ல!