வெளிநாடுகளுக்குப் போய் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் குறைகூறிப் பேசினால் அவருடைய கடப்பிதழ் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும் எனக் குடிநுழைவுத் துறை டாக்டர் மகாதிர் முகமட்டை எச்சரித்துள்ளதாம்.
“நஜிப்புக்கு ஆதரவாக இல்லாததைப் பேசினால் வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் என் கடப்பிதழ் மூன்றாண்டுகளுக்கு இரத்துச் செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது”, என முன்னாள் பிரதமர் இன்று சுங்கை புசாரில் தெரிவித்தார்.
தம் பயண ஆவணத்தைப் பறிக்கும் உரிமை குடிநுழைவுத் துறைக்கு உண்டா என்றும் மகாதிர் வினவினார்.
“கூட்டரசு அரசமைப்பில் அதை நான் படிக்கவில்லை. எங்கிருந்து இந்த உரிமை வந்தது என்று எனக்குத் தெரியவில்லை”, என்றார்.
உன்னையே நீ எண்ணிப்பார்.
முன் செய்யின் பின் விளையும் என்பது பிழையல்லவே!
எல்லாம் நீர் விதைத்த விதை தானையா? இப்பொழுது வளர்ந்து பலன் அளிக்கிறது. அனுபவித்து பயனடையுங்கள்.பாதிக்கப்பட்ட மக்களின் மனக்குமுறல் – சாபம் விடுமா என்ன?
கூட்டரசு அமைப்பில் நீங்கள் படிக்கவில்லையானாலும், அம்னோ அமைப்பில் நீங்கள் படித்திருக்கலாமே! மறந்து விட்டீர்களோ?
ஆப்ப்புகே ஆப்ப்பு , நீர் விதைத்த வினை இன்று உன்னை அறுக்கிறது . எத்தனை பேர் கண்ணீர் வர நீர் காரணமாய் இருந்தாய் . இதுதான் முற் பகல் செய்யீன் பிர்ட் பகல் விளையும் . நீர் பார்க்க வேண்டியது இன்னும் உள்ளது . அனுபவி மாமா அனுபவி .
மாமா மகாதீரே !
தமது நாட்டில் கொலை குற்றவாளிகூட தண்டனையை அனுபிவித்துவிடக்கூடாது என்ற மனிதாபிமான அடிப்படையில் அக்குற்றவாளி வேறு நாட்டுக்கு தப்பி செல்ல கடப்பிதழ் வழங்கி உதவும் அரசாங்கத்தின் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தாதீர்கள்.