அதிகரிக்கும் மனச்சோர்வு நோய்: ஓராண்டில் மட்டும் 12,000 பேர் மாயம்!

pic02ஜப்பான் நாட்டில் அதிகரிக்கும் மனச்சோர்வு நோய் (Dementia) காரணமாக கடந்த ஓராண்டில் மட்டும் 12,000 பேர் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்ட ஜப்பான் நாட்டின் தேசிய பொலிஸ் அமைப்பு, கடந்த ஓராண்டில் மட்டும் மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்ட 12,208 பேர் மாயமாகியுள்ளனர். இது கடந்த 2014ம் ஆண்டை விடவும் 13% அதிகம், அதாவது 1,452 பேர் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாயமானவர்களில் பெரும்பாலானவர்களை ஒரு வாரத்திற்கும் குறைவான கால அளவில் மீட்டுள்ளதாகவும், இதில் 479 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்தது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 150 நபர்கள் இதுவரை எங்கிருக்கிறார்கள் என கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டு தொடங்கி ஜப்பான் அரசு மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாயமானவர்கள் குறித்த தகவலை திரட்டி வருகிறது. இது 4.62 மில்லியன் எனவும், இந்த எண்ணிக்கை உயர்ந்து 70 லட்சம் என அதிகரிக்க கூடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சு சார்பில் வெளியிட்டுள்ள தகவலின்படி 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 65 வயதுக்கும் மேற்பட்ட 5ல் ஒருவர் மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் 40 சதவிகிதத்தினர் தங்களால் மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் வைத்து பாதுகாக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலானவர்கள் இதை சுமையாகவே கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் அரசு இந்த ஆண்டு மட்டும் சுமார் 152.3 மில்லியன் பவுண்ட் தொகையை ஒதுக்கி நிபுணர்களுக்கும் ஆய்வுகட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பயன்படுத்தி வருகிறது.

-http://news.lankasri.com