உலக அகதிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு! எவ்வளவு தெரியுமா?

syrian-refugee-crisis-dataஉலக அளவில் அகதிகளாக தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறியவர்கள் எண்ணிக்கை 6.5 கோடியைத் தாண்டியதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் அகதிகளாக ஐரோப்பாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

ஐரோப்பாவை நோக்கி வரும் அகதிகளின் இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு தான் மிக அதிக அளவில் இருந்ததாக ஐ.நா அமைப்பின் அகதிகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது.

உலக அகதிகள் தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி, ஐ.நா. அகதிகள் நல ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், கடந்த 2015ம் ஆண்டு இறுதியில் புலம் பெயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை 6.53 கோடியைத் தாண்டியது. அகதிகளின் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியது இதுவே முதல் முறை என்று கூறப்பட்டுள்ளது.

ஐ.நா. அகதிகள் நல ஆணையர் ஃபிலிப்போ கிராண்டி கூறுகையில், உள்நாட்டுப் போர் அதிகரித்துள்ளதால் மக்கள் அதிக சிரமத்துக்கு உள்ளாக்கப்பட்டு அகதிகளாக வெளியேறுகின்றனர்.

மேலும், அளவுக்கு அதிகமாக அகதிகள் குவிந்து வருவதால் குடியேறும் நாடுகளில் உள்ள பொதுமக்களுக்கும் கசப்புணர்வும் அதிகரித்துவிட்டது. இதனால் அவர்கள் அகதிகளுக்கு எதிராக செயல்படுகின்றனர். இது மனிதாபிமான உணர்வை சோதனைக்குள்ளாகியிருக்கிறது என்று கூறியுள்ளார்.

-http://news.lankasri.com