அம்னோ கிளர்ச்சிக்காரர்கள் 3எம் கட்சி அமைக்க ஆலோசனை

3mகிளர்ச்ச்சிக்கார  அம்னோ  கிளைத்  தலைவர்களைக்  கொண்ட  கெராக்கான்  கெத்துவா  சாவாங்கான்  மலேசியா (ஜிகேசிஎம்),  ஒரு  புதிய  கட்சி  அமைப்பது  பற்றி  ஆலோசித்து  வருகிறது.

ஆண்டுத்  தொடக்கத்தில்  அம்னோவிலிருந்து   வெளியேறிய   முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  நேற்று  கட்சியிலிருந்து  நீக்கப்பட்ட   முன்னாள்  துணைத்  தலைவர்  முகைதின் யாசின்,  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  முக்ரிஸ்  மகாதிர்  ஆகியோரைக்  கொண்டு  அக்கட்சியை  நடத்தலாம்  என்று  அது  நினைக்கிறது.

“அந்த  நோக்கத்தில்  ஜிகேசிஎம்  செயல்படும். அம்னோவின்மீது  நம்பிக்கை  குறைந்து  விட்டது.  மூடுவிழா  காணப்  போகிறதா  அம்னோ?”, என்று  ஜிகேசிஎம்  தலைவர்  கமருல்  அஸ்மான்  இன்று  ஓர்  அறிக்கையில்  வினவினார்.

பிலிப்பீன்சில்  மக்கள்  கிளர்ந்தெழுந்ததை  கமருல்  நஜிப்புக்கும்  அம்னோ  உச்ச  மன்றத்துக்கும்  நினைவுபடுத்தினார்.

“நாட்டில்  பரவலாகக்  காணப்படும்  அதிகார  அத்துமீறலை  எதிர்க்க  மக்கள்  கிளர்ந்து  எழுவார்கள்.

“நஜிப்பும்  உச்ச  மன்றமும்,  1986,  பிப்ரவரி  22-க்கும்  26-க்குமிடையே  பிலிப்பீன்சில்  மக்கள்  சக்தி  புரட்சியில்  ஈடுபட்டு  பெர்டினாண்ட்  மார்கோசைப்  அதிகாரத்திலிருந்து  வீழ்த்தியதை   மறக்கலாகாது”<  என்றாரவர்.