ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகர் மொகாடிஷு நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில், அந்நாட்டு அமைச்சர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
மொகடிஷு நகரில் உள்ள “நஸô-ஹப்லோத்’ என்ற ஹோட்டலின் நுழைவாயிலில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி பயங்கரவாதி ஒருவர் வெடிக்கச் செய்தார். அந்தக் காருக்கு பின்னால் வந்த பயங்கரவாதிகள், ஹோட்டலுக்குள் நுழைந்தவாறே துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இந்தத் தாக்குதலில், அந்நாட்டு பிரதமர் அலுவலக அமைச்சர் புரி ஹம்ஸô உள்பட 15 பேர் உயிரிழந்தனர். சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், ஹோட்டல் அறை இடிந்து விழுந்ததில் அமைச்சர் உயிரிழந்தார். பதிலுக்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் தரப்பில் 4 பேர் உயிரிழந்தனர்.
-http://www.dinamani.com