இஸ்தான்புல் பிரதான விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் பின்னணியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளது.
அத்துடன், இத்தாக்குதலை ரஸ்யா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தானை சேரந்தவர்களே நடத்தியுள்ளதாகவும் துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே, குறித்த தாக்குதலின் பின்னியில் ஐ.எஸ் அமைப்பினர் இருக்கலாம் என துருக்கி மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், குறித்த தாக்குதல் சம்பவத்தினை தொடர்ந்து இஸ்தான்புல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில், இருவர் வெளிநாட்டை சேரந்தவர் எனவும் இந்நாட்டு அதிகாரிகளில் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் சுமார் 40 பேர் வரை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com