சிவப்பு விளக்கு பகுதிகளை மூட தாய்லாந்து நடவடிக்கை

thailandதாய்லாந்து நாட்டில் சட்டவிரோதமான முறையில் நடைபெற்று வரும் பாலியல் தொழிலை ஒழிக்க அந்நாட்டு அரசு தகுந்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

தாய்லாந்தின் முக்கிய இடங்களில் உள்ள பாலியல் விடுதிகள் மற்றும் மசாஜ் நிலையங்களில் நடைபெற்ற தொடர் சோதனையின் மூலம் நாட்டின் பாலியல் தொழிலை அதிகாரிகள் குறிவைத்துள்ளனர்.

தாய்லாந்தில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது. ஆனால், இது பரவலாக அங்கு நடைமுறையில் உள்ளது. மேலும், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றுவதாக அது பார்க்கப்படுகிறது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், பாங்காக்கில் உள்ள பெரிய மசாஜ் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது, வயது குறைந்த மற்றும் போதிய ஆவணமின்றி குடியேறிகள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், உள்ளூர் பொலிஸிக்கு பணம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களும் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தரமான சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், தாய்லாந்தில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிகளை மூட தான் விரும்புவதாக தாய்லாந்தின் சுற்றுலா அமைச்சர் கோப்கர்ன் வட்டனவ்ரங்குல் தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com