வரம்பு மீறும் வடகொரியா!

north_south_001வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து, தென் கொரியாவில் ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை செய்துகொண்டுள்ளன.

இந்த ஏவுகணை தடுப்பு அமைப்பு எப்போது அங்கு நிறுவப்படும் என்று இருநாடுகளும் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், சாத்தியமான இடத்தை தேர்வு செய்யும் பணியில் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை ஏற்படுத்தும் அமெரிக்காவின் திட்டத்தையும் மீறி வடகொரியா கண்டம் விட்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் 3 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக தென்கொரியாவின் கூடுதல் தலைமை அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகொரியாவின் மேற்கு நகரான ஹவான்ங்ஜூவில் கடற்கரையில் இருந்து சுமார் 500-600 கிலோமீற்றர் தொலைவில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஸ்கட் ஏவுகணைகள் தென் கொரியாவின் அனைத்து பகுதிகளிலும் சென்று தாக்கக் கூடிய வகையில் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-http://news.lankasri.com