ஜேர்மனி தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது!

german01ஜேர்மனியில் ரயில் பயணிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

அந்நாட்டின் பவாரியா மாநிலத்தில் உள்ள டிரியூச்லிங்கென் மற்றும் உவர்ஸ்பர்க் நகரங்களுக்கு இடையில் மன்சார ரயில் சேவை இடம்பெறுகின்றது.

இந்நிலையில், ரயிலில் பயணித்த பயணிகளை இளைஞர் ஒருவர் கோடரி மற்றும் கத்திகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் நான்கு பயணிகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிலருக்கு லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டது. குறித்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட தாக்குதல்தாரியை அந்நாட்டு பொலிஸார் சுட்டு கொலை செய்துள்ளனர்.

குறித்த தாக்குதலை மேற்கொண்டவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 வயது மதிக்கத்தக்க குறித்த இளைஞர் அகதிகளுக்கான விண்ணப்பம் அளித்திருந்த நிலையில், ஓச்ஸென்பர்ட் நகரில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த தாக்குதலுக்கு தற்போது ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

“ஜேர்மனி ரயிலில் பயணிகள் மீதான தாக்குதலுக்கு நாங்கள்தான் காரணம்” என அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com