பிரான்ஸ் வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்தக் கோரிக்கை

பிரான்ஸில் செவ்வாய்கிழமையன்று, தேவாலயத்தில் காலை பிராத்தனைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த மூத்த மதகுரு, இரண்டு ஜிகாதிகளால் கொல்லப்பட்டதையடுத்து வழிபாட்டு தலங்களில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும் என அனைத்து மதகுருக்களும் கோரியுள்ளனர்.

பிரான்ஸின் மதக்குருக்கள்

பிரான்ஸின் முஸ்லிம் தலைவர் தலில் பொபகீர், அவர்கள் பாதுகாப்பில் நீடித்த கவனம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மத ஒற்றுமை நிகழ்ச்சி ஒன்றில்,பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந்துடனான கிறித்துவ, முஸ்லிம், யூத, பெளத்த தலைவர்களின் சந்திப்பிற்கு பிறகு அவர் இவ்வாறு தெரிவிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து தொலைக்காட்சி ஒன்றில் உரை நிகழ்த்திய ஒல்லாந், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா இதுவரை இந்த அளவு தீவிர அச்சுறுத்தலை எதிர்நோக்கியதில்லை, தீவிரவாத்திற்கு எதிரான சட்டங்கள் ஏற்கனவே அங்கு வலுவாக உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

பாதிரியாரைக் கொன்ற தாக்குதலாளிகளை போலிஸார் சுட்டு கொன்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. -BBC