பாகிஸ்தானில் உள்ள தாரா நகரில் துப்பாக்கிகள் மிக குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.
மலைகளால் சூழப்பட்ட இந்த நகரில் வசிக்கும் தொழிலாளர்கள் துப்பாக்கிகளை மிக அருமையாக தயாரிக்கும் அனுபவம் கொண்டவர்கள்.
பிற நாட்டினர் பயன்படுத்தும் நவீன துப்பாக்கிகளை பார்த்தால் கூட, எவ்வித மாற்றமும் இன்றி அதே போன்று இவர்கள் தயாரித்துவிடுவார்கள்.
இவர்களிடம் இருந்தே பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கிகளை விலை கொடுத்து வாங்குகின்றனர், மேலும் மலை சூழ்ந்த இடம் என்பதால் தீவிரவாதிகளுக்கும் இது வசதியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் சமீப காலமாக தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டுவருவதால், தாரா நகரில் வியாபாரம் மந்தமாகியுள்ளது, மேலும் நாட்டிற்குள் வரும் வெளிநாட்டினகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதால், ஏற்றுமதியும் செய்யப்படுவதில்லை.
ஆனால, பாகிஸ்தான் அரசு இந்த தாரா நகரில் இயங்கி வரும் இந்த துப்பாக்கி தொழிற்சாலையை மூடாமல் அப்படியே விட்டுள்ளதால், ரகசிய வியாபாரம் நடந்து வருகிறது.
துருக்கி மற்றும் பல்கேரியாவில் தயாராகும் எம்.பி.5 ரக இயந்திர துப்பாக்கி இங்கு ரூ.7 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.
-http://news.lankasri.com