சிரியாவின் பல நகரங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ் இயக்கம், வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த “மான் ஜப்” என்னும் நகரத்தை இழந்துள்ளது. குறித்த நகரத்தை புலனாய்வு நகரம் என்று கோட் வேட் வைத்தே அமெரிக்கர்கள் அழைப்பது வழக்கம். ஐ.எஸ் இயக்கம் தனது முழு தகவல்களையும் அங்கே தான் வைத்திருந்தார்கள். நேற்று இரவு நடைபெற்ற அதிரடி தாக்குதல் ஒன்றினூடாக அங்கே அமைந்துள்ள ஐ.எஸ் இயக்க தலைமை கட்டத்தை அமெரிக்க ஆதரவு துருப்புகள் கைப்பற்றியுள்ளார்கள். அவர்கள் 10,000 ஆவணங்களையும். சுமார் 4 கிகாபைட் (கம்பியூட்டர்) டேட்டாக்களையும் கைப்பற்றியுள்ளார்கள். ஐ.எஸ் இயக்க உறுப்பினர்கள் தொடர்பான அனைத்து விடையங்களும் அதில் உள்ளது. அதுபோக ஐ.எஸ் இயக்கம் எந்த நாடுகளில் ,எந்த உறுப்பினர்களை வைத்திருக்கிறார்கள் என்றும் அதில் உள்ளது.
பெயர் படங்கள் வயது என்று பலதரப்பட்ட தகவலோடு இந்த டேட்டாக்கள் உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஐ.எஸ் இயக்கம் எவ்வாறு ஆட்களை சிரியா ஊடாக துருக்கிக்கு கடத்துகிறது. துருக்கி நாட்டில் இருந்து அவர்கள் எவ்வாறு வேறு வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். எவ்வாறு சென்றார்கள். அவ்வாறு சென்றது யார் என்பது தொடர்பான அனைத்து விடையங்களும் தற்போது அமெரிக்க கைகளில் சிக்கியுள்ளது. இனி சொல்லவா வேண்டும் ? சும்மாவே குட்டையை கிளறும் அமெரிக்கா தகவல் கிடைத்தால் சும்மா இருக்குமா ? ஆனால் தற்போது பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்கிறார்கள், ராணுவ அதிகாரிகள்.
ஏன் எனில், தமது அடையாளங்கள் வெளியானதை அடுத்து வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்பதே தற்போது நிலவும் பெரும் அச்சமாகும்.
-http://www.athirvu.com