குடிநுழைவுத் துறை நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட புக்கிட் மெர்தாஜாம் எம்பி ஸ்டீபன் சிம், அத்துறையின் புதிய தலைமை இயக்குனர் முஸ்தபார் அலி அதனைத் துப்புரவுபடுத்த அரச விசாரணை ஆணையம் தேவை என்ற கோரிக்கையை ஏற்று அதற்கு ஆதரவாக நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அத்துறையில் பல பிரச்னைகள் நிலவுவதாகவும் அவற்றுள் ஆவணப்படுத்தப்படாத அன்னிய தொழிலாளர்கள், மனித கடத்தல் நடவடிக்கைகள், “ஒழுங்கற்ற” அன்னிய தொழிலாளர் கொள்கை போன்றவை முக்கியமானவை என்று சிம் ஓர் அறிக்கையில் கூறினார்.