நம்வீ என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் சர்ச்சைக்குரிய ரேப் இசைக்கலைஞரான வீ மெங் சீ வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார்.
நம்வீ ஆகக் கடைசியாக வெளியிட்டிருக்கும் காணொளியில் இஸ்லாத்தையும் மற்ற சமயங்களையும் இழிவுபடுத்தியிருப்பதால் அது குறித்து விசாரிக்க அவர் கைது செய்யப்படுவார் என பினாங்கு வடகிழக்கு போலீஸ் மாவட்டத் தலைவர் மியோர் பாரிட் அலாட்ராஷ் வாஹிட் கூறினார்.
“அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதாக தெரிகிறது. அவர் மலேசியா திரும்பியதும் கைது செய்வோம்”, என்றவர் தெரிவித்ததாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
நம்வீ-இன் ‘Oh My God’ காணொளியில் அவர் இஸ்லாத்தை இழிவுபடுத்துக்கிறார் என்று 20 என்ஜிஓ-கள் புகார் செய்ததை அடுத்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதில் எல்லாம் குறைச்சல் இல்லை! உள்ளே தள்ள வேண்டியவன் வெளியே சுற்றுவதும், வெளியே இருக்க வேண்டியவன் உள்ளே இருப்பதும் – வாடிக்கை ஆகிவிட்டது!