வேலை இழந்து தவிக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசியக் குடியேறி தொழிலாளர்களுக்கு உதவுவதாக சௌதி அரேபிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
குடியேறித் தொழிலாளர்கள் புதிய வேலைக்கு மாறுவதையோ அல்லது நாட்டை விட்டு வெளியேறுவதையோ தடுக்கும் விதிகளை தளர்த்துவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புதன் கிழமையன்று, சௌதி அரேபியாவுக்கு வந்த இந்திய துணை அமைச்சர், வி.கே.சிங் 8,000க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்களின் நிலை குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கினார். அந்த தொழிலாளர்கள் கட்டுமான நிறுவனங்களால் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டவர்கள்; மற்றும் அவர்களுக்கு சம்பள பாக்கி உள்ளது.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் குடியேறிகளும் , பாகிஸ்தானை சேர்ந்த 8000 பேரும் இதே நிலையில் இருப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது. -BBC