எம்பி: திரெங்கானு அரசு உறுதியாக உள்ளது, திங்கள்கிழமை எதுவும் நிகழாது

mbதிரெங்கானு  மந்திரி   புசார்   அஹ்மட்  ரசிப்   அப்துல்  ரஹ்மான்   திங்கள்கிழமை     சட்டமன்றம்  கூடும்போது   அசம்பாவிதம்  எதுவும்   நிகழ    வாய்ப்பில்லை   என்றார்.

அவர்    பதவி   விலக    வேண்டும்    என்று   கடந்த   ஒரு   வாரமாக   முன்னாள்   மந்திரி   புசார்    அஹ்மட்  சைட்  கோரி  வருவதை   அடுத்து   மாநில   அரசில்    நெருக்கடி   நிலவுவதாகக்   கூறப்படுவது   பற்றி   அவர்  கருத்துரைத்தார்.

“எதுவும்   நடக்காது.

“மாநிலத்தில்  நிலைமை    நன்றாக  உள்ளது”,  என்றவர்   புத்ரா  ஜெயாவில்   செய்தியாளர்களிடம்   தெரிவித்தார்.