100க்கும் மேற்பட்ட அகதிகள் இத்தாலி எல்லையில் அமைந்திருந்த பொலிஸ் தடைகளை உடைத்து அதிரடியாக பிரான்ஸில் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலியின் வேண்டிமிக்லியா நகரில் அமைக்கப்பட்டிருந்த எல்லைக்கு அருகே கூடிய சுமார் 150 அகதிகள் சில மணிநேரங்களில் பொலிஸ் தடைகளை உடைத்து பிரான்ஸில் நுழைந்ததாக வேண்டிமிக்லியா பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.
நூற்றுக்கணக்கான அகதிகள் வடக்கு ஐரோப்பாவிற்கு செல்ல படகு மூலம் இத்தாலிக்கு வருகின்றனர். கடந்த ஆண்டு அகதிகளின் தற்காலிக முகாமாக திகழ்ந்த வேண்டிமிக்லியா கடற்கறையை சமீபத்தில் பொலிசார்அப்புறப்படுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் இருந்து சுமார் 94,000 பேர் இத்தாலி வழியாக லிபியாவிற்கு சென்றுள்ளனர்,
இவ்வாறு கடந்து செல்பவர்களுக்கு சுமார் 100 டொலர் அபராதம் விதிப்பதாக பொலிஸ் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
-http://news.lankasri.com