பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள 150 அரச அதிகாரிகள் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ துட்டர்டே பகிரங்கமாக இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நகராதிபதிகள், பொலிஸ் தலைமை அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டவர்கள் இதில் அடங்குவதாக அவர் கூறியுள்ளார்.
அந்நாட்டு ஊடகம் ஒன்றில், நேர்காணலில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி இந்தத் தகவலினை குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த குற்றச்சாட்டை குறித்த அரச அதிகாரிகள் மறுத்துள்ள, அதேவேளை, ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள பெயர் பட்டியலில் உள்ள பெயர்கள் போலியானவை எனவும் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில், ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள பெயர் பட்டியலில் உள்ள நீதிபதி ஒருவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை போதைப் பொருளிலிருந்து நாட்டை மீட்பதாக தெரிவித்தே ரொட்ரிகோ துட்டர்டேஜனாதிபதியாக கடந்த ஜுன் மாதம் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com