‘நான் அமனாவின் மந்திரி புசார் வேட்பாளரா?’, மறுக்கிறார் பாஸ் திரெங்கானு சட்டமன்ற உறுப்பினர்

t'ganuதெபோ  சட்டமன்ற  உறுப்பினர்  ஹிஷாமுடின்  அப்துல்  கரிம்   தாம்    திரெங்கானு    மந்திரி   புசார்   வேட்பாளர்   என்றும்     அதற்கு    பார்டி அமனா  நெகாரா  ஆசி  உண்டு   என்றும்   கூறப்படுவதை   மறுக்கிறார்.

“என்னை  அமனாவுடன்  இணைத்துப்  பேசப்படுவது   இது    இரண்டாவது   தடவையாகும்.   இதை  நான்    மறுப்பதே   முறையாகும்    என   நினைக்கிறேன்.  இல்லையேல்     என்  கட்சிக்காரர்களும்    தொகுதி   மக்களும்     இதைத்   தப்பாக  புரிந்து  கொள்ளக்கூடும்.

“நான்  பாஸ்  உறுப்பினன்.  அக்கட்சிக்காவே  என்னை  அர்ப்பணித்துக்  கொண்டிருக்கிறேன்”,  என்றாரவர்.

தம்மை   அமனாவுடன்  தொடர்புப்படுத்துவது   நெறிமுறையற்ற  செயல்  என்றும்   அதை   உடனே  நிறுத்த   வேண்டும்  என்றும்   ஹிஷாமுடின்    கேட்டுக்கொண்டார்.