பேராக் மஇகா மகளிர் பகுதி முன்னாள் தலைவர் எஸ்.தங்கேஸ்வரி பேராக் சட்டமன்றத் தலைவராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். எஸ்.கே. தேவமணி விலகியதை அடுத்து சட்டமன்றத் தலைவர் பதவி காலியானது.
பேராக் சட்டமன்றத் தலைவராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். சட்டமன்றத் தலைவருக்காக நடந்த வாக்கெடுப்பில் தங்கேஸ்வரிக்கு 30 வாக்குகளும் எதிரணி வேட்பாளர் பத்து காஜா எம்பி வி. சிவகுமாருக்கு 24 வாக்குகளும் கிடைத்தன. 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதற்குமுன் சட்டமன்றத் தலைவராக இருந்த தேவமணி பிரதமர்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து அப்பதவியிலிருந்து விலகினார்.
oru thamizh penmaniyai maanila sabaanaayagaraaga therntheduththa BN nukku namathu vaazhththukkal.
வாழ்த்துக்கள். இந்த வேலையையாவது ஒழுங்காகச் செய்யுங்கள்.
வாழ்த்துக்கள்! உங்கள் அடுத்த வேலை மந்திரி பதவியை நோக்கித்தான் இருக்குமே தவிர மற்றபடி நீங்கள் எதையாவது இந்தச் சமூகத்திற்குச் செய்வீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை! சாமியே துணை! நீங்களாவது நல்லபடியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்!
வாழ்துக்கள் தங்கேஸ்வரி அவர்களே.அடுத்த பொது தேர்தலுக்கு பின் இப்பதவி அம்னோவின் கைவசம் என்று பரவலாக பேசப்படுகின்றது ? உண்மையா ? பக்கத்தான் ஆட்சியில் இந்தியர்களுக்கு கிடைக்கப்பட்ட பதவி இது நிலைத்திருக்குமா? பொறுத்திருந்து பாப்போம் .
வாழ்த்துக்கள் தங்கேஸ்வரி அவர்களே…!
அப்படியே கிழித்து தமிழனின் வாயில் வைத்துவிடுவாள் MIC என்றுமே சுயநலவாதிகள் மக்களை சூறையாடுவது இவனுங்க தலையாய வேலை தங்கேஸ்வரி ஆரம்பகால அரசியல் இப்போதைய அரசியல் தமிழனிடம் நன்கொடை வாங்கி பாமிலியாய் வோட்டுவதுதான்
பக்கத்தான் ஆட்சி பிடிக்கவில்லை எனில் இந்த மாற்றம் வந்திருக்காது.ம இ கா அம்னோவிடம் தாரை வார்த்து கொடுத்திருக்கும். எது நடந்தாலும் மஇகா வழியோ அல்லது தேசிய முன்னணி வழியோ தமிழர்களுக்கு எந்த மாற்றமும் ஏற்பட போவது இல்லை.
ஈஸ்வரி ,நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது ! சட்டு புட்டு னு நாலு காசு பாத்திடு ! இதெல்லாம் நிரந்தரம் இல்ல ! ம .இ. க . காரன் கிடைத்த முழு மந்திரி பதவியை யே கட்சி பூசல்ல பறக்க விட்டு டானுங்க ! மோகனா வேற யாரையாவது கை காமிச்சா உன்ன மாத்திடுவானுங்க !
பாக்கத்தான் ஆட்சியில் தமிழர்களுக்குகாக உண்டாக்கப்படட பதவி .
மா இ கா வை இன்னமும் நம்புகிற கூட்டத்தை மொதல்ல வெரட்டிடனும். அப்பத்தான் மா இ கா திருந்தும். தமிழர்களின் சொத்துக்களான AIMST சாமி வேலு வோடானு சொல்லி கிட்டு திரியறாரு சாமி. இந்த அம்மா என்ன பண்றாங்க ? வாயில சூப்பு கித்த வெச்சிக்கிட்டு இருங்கங்களா ?
வாழ்த்துக்கள் உண்மைக்கு போராடுங்கள் வென்றி நிச்சயம் .
வாழ்த்துகள் . வாய்ப்பை பயன்படுத்தி சம்பாதித்து குடும்பத்தை உயர்த்துங்கள்.
ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் . இன்னும் ஓராண்டுக்குள் சேர்க்க வேண்டியதை சேர்த்து கொள்ள வேண்டியது உன் பொறுப்பு . உன் சொந்தங்களை உன்னுடன் கூட்டு சேர்த்துக்கொள் . வீணாய் போன சுப்ராவை பகைத்து கொள்ளாதே .