பேரணி நடத்த அரங்கம் தேடித்தருவதாகக் கூறிய கெராக்கான் இளைஞர் பகுதியைத் தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே சாடியது.
அவர்கள் அரங்கம் தேடுவதை விடுத்து 1எம்டிபி ஊழல்மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கலாம் என பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா கூறினார்..
“கெராக்கான் போன்ற அரசியல் கட்சிகள் விவாதிக்கவும் கவனம் செலுத்தவும் பல விவகாரங்கள் உள்ளன.
“உதாரணத்துக்கு, மலேசிய ஊழல்தடுப்பு ஆணையமும் பொதுக் கணக்குக் குழுவும் செய்த விசாரணைகள் விடை தெரியாத பல கேள்விகளை எழுப்பி இருப்பதால் 1எம்டிபிமீதான விசாரணைகளை மீண்டும் நடத்தச் சொல்லிக் கெராக்கான் கோரிக்கை விடுக்கலாம் .
“1எம்டிபியிலிருந்து பில்லியன் கணக்கில் பணம் வெளியேறியுள்ளது குறித்து பிஎன் கட்சிகள் எதுவும் கேள்வி எழுப்பியதில்லை. அவை உடனடி விசாரணைக்கு ஏற்பாடு செய்து மலேசியாவின் முதல்நிலை அதிகாரியைக் கைது செய்ய வேண்டும். மக்களுக்காக அவர்கள் இதைச் செய்வது அவர்களின் கடமையாகும்”, என மரியா சின் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அதை எல்லாம் அந்த நா… செய்யாது, நஜிப்பின் காலை …. நேரம் போதவில்லை அதில் இது வேறா