239 பேரை பலி கொண்ட மலேசியா விமானம்: அவுஸ்திரேலிய வல்லுனர்கள் கண்டுபிடிப்பு?

mh370debris

2 ஆண்டுகளுக்கு முன் 239 பயணிகளுடன் பயணமான மலேசியா விமானம் எம்.எச் 370 மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு அருகே இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்திருப்பதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370, கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் திகதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்றது. அதில் 227 பயணிகளும், 12 சிப்பந்திகளும் இருந்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த விமானம், நடுவானில் மாயமானது.

அந்த விமானம் இந்தியப்பெருங்கடலில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. ஆனால் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 135 மில்லியன் டொலர் (சுமார் ரூ.905 கோடி) செலவில் தேடும் பணி நடந்தும், அந்த விமானத்தைப்பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அந்த விமானத்தில் இருந்து பெறப்பட்ட சிக்னல்களை அவுஸ்திரேலியாவை சேர்ந்த வல்லுனர்கள் ஆராய்ந்தார்கள்.

அதில் அந்த விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு, அது நிமிடத்துக்கு 20 ஆயிரம் அடி என்ற வேகத்தில் தொடங்கி அதிவேகமாக கடலில் விழுந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

விமானம் தற்போது தேடப்படும் பகுதியில்தான் கடலுக்குள் விழுந்திருக்க வாய்ப்பு இருப்பதாக அவுஸ்திரேலிய போக்குவரத்துப் பாதுகாப்பு ஆணைய தலைமை ஆணையர் கிரேக் ஹூட் கூறியுள்ளார்.

-http://news.lankasri.com