ஜேர்மனியில் ஏற்படும் தொடர் தாக்குதல்களை தடுக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஈராக் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து வெளியேறும் மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைகின்றனர். இவர்களில் பெரும்பாலான மக்களுக்கு ஜேர்மன் அடைக்கலம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் சமீபகாலமாக அங்கு தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
எனவே பயங்கரவாத குற்றசாட்டுகளுக்கு உள்ளாகும் அகதிகளை விரைவில் நாட்டை விட்டு வெளியேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-http://news.lankasri.com