உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளை அறிவுத்திறனில் விஞ்சிய இந்திய சிறுவன்…

geniusஅறிவுத்திறன் தேர்வில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளை இந்திய சிறுவன் ஒருவர் மிஞ்சி பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறான்.

லண்டனில் வசித்து வரும் துருவ் தலாடி எனும் 10 வயது சிறுவன் மென்சாவின் அறிவுத்திறன் தேர்வில் அதிகப்படியான மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளான்.

2016 ஜூலையில் நடைபெற்ற மென்சாவின் Cattell III B Paper தேர்வில் 162 மதிப்பெண்கள் பெற்று தலாடி சாதனை படைத்துள்ளான்.

ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் பெற்ற 160 மதிப்பெண்களை விட இந்திய சிறுவன் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளான்.

இதன்மூலம் பார்க்கிங்சைட் பகுதியில் உள்ள Fullwood Primary பள்ளியில் படித்து வரும் துருவ், உலகின் அதிக அறிவுத்திறன் வாய்ந்தோர் குழுவில் இணைந்துள்ளார். “அறிவுத்திறன் தேர்வானது கடினமாக இல்லாவிட்டாலும், தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட குறைந்தபட்ச நேரமே தேர்வை கடினமானதாக மாற்றியது” என துருவ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com