டாக்டர் மகாதிர் முகம்மட் அவரது புதிய கட்சியை நிலைப்படுத்திக்கொள்ள மிகவும் சிரமப்படுவார் என்கிறார் அவரின் பழைய எதிரி தெங்கு ரசாலி ஹம்சா.
மகாதிர் பிரதமராக இருந்தபோது அம்னோவிலிருந்து பிரிந்து சென்று ஒரு தனிக் கட்சியை அமைத்தவரான தெங்கு ரசாலி, அரசாங்க இயந்திரம் மொத்தமும் பார்டி பிரிபூமிக்கு எதிராக வேலை செய்யும் என்றார்.
“அவருக்குள்ள செல்வாக்கை வைத்து மகாதிரால் ஆதரவாளர்களைத் திரட்ட முடியும். ஆனால், அரசாங்கம் தன் வலிமை அத்தனையையும் கொண்டு மக்கள் எதிரணிக்கு ஆதரவளிப்பதைத் தடுக்கும்”, என இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் தெங்கு ரசாலி கூறினார்.
இதுபோக, அம்னோ இன்னும் வலுவாக இருப்பதும் மலாய்க்காரர்- அல்லாதார் இணை உறுப்பினர்களாக ஒதுக்கப்பட்டிருப்பதும் புதிய கட்சி வலுப்பெற தடங்கல்களாய் இருக்கும் என்றாரவர்.
மகா தீரரும் ! தானை தலைவனும் ! சேர்ந்து கொண்டு நாட்டு மேம்பாடு என்று இந்திய சமுதாயத்திற்கு ,குறிப்பாக தோட்ட மக்களுக்கு இழைத்த கொடுமைகள் போதும் ! வீடு இழந்து ! வேளை இழந்து ! படித்த பள்ளியை இழந்து ! கும்பிட்ட கடவுளை இழந்து ! வளர்த்த கோழி ,ஆடு ,மாடுகளை இழந்து ! வாழ வழி தெரியாமல் தானாம் அராமில் ! கழிப்பறை வசதி இன்றி , தண்ணீர் இன்றி ! மின்சாரம் இன்றி !! போதும் இவர்கள் இருவரும் தமிழனுக்கு செய்த கொடுமைகள் சொல்லி மாளாது ! அனுபவித்தவர்களுக்கு தான் புரியும் அந்த வேதனை ! பிரதமருக்கு கேக் ஊடும் நாடகமெலாம் நமக்கு வேண்டாம் ! நாமும் இந்த மண்ணுக்கு சொந்த காரர்கள் என்ற உரிமையோடு போராடு ஓம் !!நாம் இன் நாட்டு மண்ணின் மைந்தர்கள் !!