டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவோம்: பிரபலங்கள் கோபம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் அந்நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறியுள்ள பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் தொடக்கத்தில் இருந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறார்.

டொனால்ட் டிரம்பின் கடுமையான கருத்துக்களால் அதிருப்தி அடைந்துள்ள சில முக்கிய பிரபலங்கள் ‘டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியானால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவோம்’ எனக் கூறியுள்ளனர்.

பல்வேறு துறைகளை சார்ந்த அந்த 8 பிரபலங்களின் பட்டியல்:
மைலி சைரஸ்

டென்னிஸி மாகாணத்தில் வசித்து வரும் 23 வயதான இந்த பிரபல பாடகர் டொனால்ட் டிரம்பை கடுமையாக எதிர்த்து வருகிறார். இது குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசியபோது, ‘கடவுளே…..இவர் தான் என்னுடைய ஜனாதிபதியா? இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தால், அமெரிக்காவை விட்டு வெளியேறிவிடுவேன். ஒரு விடயத்தை கூறினால் அதனை நிச்சயம் நிறைவேற்றுவேன்’ எனக்கூறியுள்ளார்.

ஊபி கோல்ட்பெர்க்

நியூயார்க் நகரில் வசித்து வரும் 60 வயதான இவர் ஒரு சிறந்த நடிகை ஆவார். டொனால்ட் டிரம்ப் குறித்து இவர் அளித்த பேட்டியில், ‘டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியானால், அமெரிக்கா அமெரிக்காவாக இருக்காது. இதுபோன்ற ஒரு அமெரிக்கா எனக்கு தேவையில்லை. இது உண்மையானால் அமெரிக்காவை விட்டு வெளியேற இதுவே சரியான நேரமாகும்’ என பேசியுள்ளார்.

சாமுவேல் எல்.ஜாக்ஸன்

ஜுராசிக் பார்க், தி அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களில் நடித்த ஒரு சிறந்த நடிகர் ஆவர். டொனால்ட் டிரம்பை பற்றி கருத்து தெரிவித்தபோது அதிக ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியது இவராக தான் இருக்கம் முடியும். ஆனால், அவருடைய வார்த்தைகள் இங்கு தவிர்க்கப்பட்டுள்ளன.

’இந்த மனிதர் என்னுடைய ஜனாதிபதி ஆனால் கருப்பினரான நான் என்னுடைய தாய்நாடான தென் ஆப்பிரிக்காவிற்கே திரும்பிவிடுவேன்’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

ரேவென் சைமோன்

இவர் சிறந்த நடிகையும் தொலைக்காட்சி பிரபலமும் ஆவர். டொனால்ட் டிரம்ப் குறித்து இவர் பேசியபோது, ‘தேர்தல் குறித்து நான் ஒரு உறுதிமொழி எடுத்திருக்கிறேன். குடியரசு கட்சி சார்பில் யார் ஜனாதிபதியாக வெற்றி பெற்றாலும், என்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துக்கொண்டு நான் கனடா நாட்டிற்கு சென்றுவிடுவேன்.

நீங்கள் நம்பவில்லையா? நிச்சயமாக, இதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கனடா நாட்டிற்கு செல்வதற்கு டிக்கெட் கூட எடுத்துவிட்டேன்’ தடாலடியாக என தெரிவித்துள்ளார்.

செர்

70 வயதான இந்த அமெரிக்க பாடகர் தற்போது கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். டொனால்ட் டிரம்ப் குறித்து இவர் ஒரே ஒரு வரியை மட்டும் உறுதியாக தெரிவித்துள்ளார்.

’டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியானால், இந்த பூமியை விட்டு ஜுபிடர் கிரகத்திற்கு சென்றுவிடுவேன்’ எனக்கூறியுள்ளார்.

 

நீவ் கேம்பெல்

நீவ் கேம்பெல் கனடிய பாடகராக இருந்தாலும், இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்.

’டிரம்ப் ஜனாதிபதியாக இருப்பார் என்பதை நினைக்கும்போதே அச்சமாக இருக்கிறது. இது கனவிலும் கூட நடக்க கூடாது. ஒருவேளை இது சாத்தியமானால் எனது தாய்நாடான கனடாவிற்கு திரும்பி விடுவேன்’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜோன் ஸ்டூவர்ட்

அமெரிக்க கொமடி நடிகரான இவர் தற்போது நியூயோர்க் நகரில் வசித்து வருகிறார். டொனால்ட் டிரம்ப் குறித்து இவர் பேசியபோது, ‘டிரம்ப் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால், ஒரு ராக்கெட் மீது ஏறி அமர்ந்து வேறு ஒரு கிரகத்திற்கு சென்றுவிடுவேன். ஏனெனில், டிரம்ப் ஜனாதிபதியானால் இந்த பூமி கோமாளிகளின் கூடாரம் ஆகிவிடும்’. எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

ரேண்டி பிளைத்

மிகச்சிறந்த இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான இவர் தற்போது வெர்ஜினியாவில் வசித்து வருகிறார். ’டொனாட்ல் டிரம்ப் அரசியல்வாதி இல்லை. அவர் ஒரு கோமாளி. டிரம்ப் ஜனாதிபதியானால், அவர் அப்பதவியில் இருக்கும் வரை அமெரிக்காவிற்கு திரும்ப மாட்டேன்’ எனக்கூறியுள்ளார்.

-http://news.lankasri.com