ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களது பாதுகாப்பு கருதி 2000 பொதுமக்களை கடத்தியுள்ளதாக அமெரிக்க கூட்டுப்படை மற்றும் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் ஆதிக்கம் கொண்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக சிரிய படையினர், அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையுடன் இணைந்து ஐஎஸ் தீவிரவாதிளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிரியாவின் மன்பிஜ் நகரில் வலுவான நிலையில் இருந்த ஐஎஸ் தீவிரவாதிகளை கடந்த 10 ஆம் திகதி அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினர் விரட்டியடித்தனர்.
பெரும்பாலான ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், குறைந்த அளவு ஐஎஸ் தீவிரவாதிகளே அங்கு உள்ளனர்.
இதனால் அவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக வடக்கு சிரியாவில் உள்ள 2000 பொது மக்களை கடத்தியுள்ளதாக அமெரிக்கா கூட்டுப்படை மற்றும் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
மேலும் அப்பொதுமக்கள் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள வடக்குசிரியாவின் மன்பிஜ் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
-http://news.lankasri.com