சிரியாவில் இருந்து நூற்றுக்கணக்கான ஐ.எஸ் தீவிரவாதிகள் தமது ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் சகிதம் தப்பி ஓடி வருகிறார்கள். அமெரிக்க வேவு விமானங்கள் இதனை கண்காணித்துள்ளது. ஆனால் தாக்குதல் நடத்த முடியாது. காரணம் என்னவென்றால் இவர்கள் தப்பி ஓடும் வேளைகளில் கூட்டம் கூட்டமாக மக்களை மனித கேடயமாகப் பயன்படுத்திச் செல்கிறார்கள். எனவே இவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், பல பொதுமக்கள் கொல்லப்படுவார்கள். இதன் காரணமாகவே தாக்குதல் எதனையும் அமெரிக்கா நடத்தவில்லை என்று அறியப்படுகிறது.
குறித்த தீவிரவாதிகள் எங்கே செல்கிறார்கள் என்பது போன்ற விபரங்களையே அமெரிக்கா திரட்டி வருகிறது. ஒரு வழியாக ஐ.எஸ் தீவிரவாதிகளின் சிரிய நிலைகளை அமெரிக்கா தவிடுபொடியாக்கியுள்ளது. பலமாக இருந்த பல பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்போது பெரும் தோல்வியின் விழிப்பில் உள்ளார்கள். ஆனால் அல்-கைடாவை பொறுத்தவரை பின் லேடனின் மகன் அதனை நடத்தி வருகிறார். வெறும் 12 வயதே ஆகும் பின் லேடனின் மகன் , அவ்வியக்கத்தை நடத்தும் முறையைப் பார்த்து அமெரிக்காவே வாய் பிழந்த் நிற்கிறது என்கிறார்கள். அவர் எங்கே இருக்கிறார் ? என்ன செய்கிறார் என்பதனை அமெரிக்காவால் கண்டறிய முடியாதவாறு உள்ளதாக கூறப்படுகிறது.
-http://www.athirvu.com