கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் தம் சொத்து விவரங்களைப் பகிரங்கமாக அறிவிக்கப் போவதில்லை. அவ்வாறு செய்வது குடும்பத்தினருக்கு ஆபத்தாக முடியலாம் என்றவர் அஞ்சுகிறார்.
தாமும் கோலாலும்பூர் மேயர் அமின் நோர்டின் அப்துல் அசிசும், பகிரங்கமாக இல்லை என்றாலும்கூட , சொத்து விவரங்களை ஆண்டுதோறும் அறிவித்து வருவதாக அவர் சொன்னார்.
“அதைப் பகிரங்கமாக அறிவிக்க முடியாது. ஏனென்றால், நான் ஏற்கனவே தொழில் செய்தவன். என்னிடம் சொத்துகள் நிறைய உண்டு.
“என்னிடம் உள்ளதை அறிவிக்க இயலாது. அப்படிச் செய்தால் என் பிள்ளைகள், மனைவி கடத்தப்படலாம். என்னவெல்லாமோ நடக்கலாம். கொள்ளையர்கள் எங்களைக் குறி வைக்கலாம்”, என்று தெங்கு அட்னான் இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
தாம் ஒவ்வோராண்டும் பிரதமரிடம் சொத்து விவரங்களை அறிவித்து வருவதாகவும் மேயர் அரசாங்கத் தலைமைச் செயலாளரிடம் சொத்துகளை அறிவிக்கிறார் என்றும் அமைச்சர் விளக்கினார்.
உலகில் எந்த நாட்டிலுமுள்ள அமைச்சர் இவ்வளவு கெட்டிக்காரத்தனமாக பதில் கூறியது கிடையாது.நம்ம் நாட்டின் போலிஸ் டி அம்னோ மலேசியா மீது உமக்கு நம்பிக்கை கிடையாது.நேர்மையா சம்பாதிச்சதா இருந்தா தைரியமா சொத்து விவரங்களை காட்ட வேண்டியதுதானே.அதுவும் இவருடைய பரம யோக்கியன் அந்த 1 MDB புகழ் நஜிப்பிடம்தான் காட்டுவாராம்.எல்லாம் ஒரே குட்டையில ஊறிய மட்டைதான்டா.
இவனைப்போன்ற மடையர்களுக்கு அம்னோவில் பஞ்சம் இல்லை– இதையும் கேட்டுக்கொண்டு இருக்கும் ஜென்மங்களை என்னே என்று சொல்வது?
அகா அமைச்சர் என்ன சொல்ல வருகிறார். அப்படியென்றால் மலேசியா பாதுகாப்பாற்ற நாடா?
அரண்டவன் கண்ணனுக்கு இரண்டதெல்லாம் பேய்.
ஆகவே, மலேசிய மக்களே…சுருட்டுங்கள்…லஞ்சம் வாங்குங்கள்…
வணக்கம். நாட்டின் பெரிய தொழில் அதிபர்கள் சொத்துகள் எல்லாம் பகிரங்கமாக அறிவிக்க படும்போது, உனக்கு மட்டும் என்ன கேடு. உன்னை மட்டும் கடத்தி விடுவார்களா. அப்படி என்றால் இந்த நாட்டின் பாதுகாப்பு அவ்வளவு சரியாக இல்லை என்று நீங்களே ஒத்து கொள்கிறீர்கள்.
ஐயோடா நீயே உன் வாயால் உன்னிடம் நிறைய பணம் இருப்பதாக சொல்லிவிடடாயே. நீ உன் சொத்து விவரத்தை காட்டவில்லை என்றால் என்ன, இனி உன் திருட்டு சொத்துக்கு யாரும் பொறுப்பல்ல.
திருடர்களே இனி உங்கள் பார்வை இவர் வீடு மேலோ?
கேப்மாரினு கேள்விப்பட்டதுண்டு , ஆனா இவனைப்போல முடிச்சவித்த கோளாறானவன யாரவது பார்த்ததுண்டா ??? மலேசியாவில் உள்ள கோடீஸ்வரர்களை அவர்களின் சொத்துமதிப்பை ஒவொரு ஆண்டும் பத்திரிகைகளில் பார்க்கிறோம் ! அவர்களுக்கு என்ன குடும்பம் இல்லையா , அவர்கள் என்ன சன்னியாசிகளா ?? கொள்ளை அடித்ததை சொல்லமுடியவில்லை என்று கூறுடா கூர்முட்டா !!!