இன்று காலை மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) புதிய தலைவர் சுல்கிப்ளி அஹ்மட், கோலாலும்பூரில், இஸ்தானா நெகராவில் மாட்சிமை தங்கிய மாமன்னர் துவாங்கு அப்துல் ஹாலிம் மு’வாட்சம் ஷா முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
சுல்கிப்ளி, 48, முன்பு சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் தேசிய வருவாய் மீட்டெடுப்புக் குழு இயக்குனராக பணியாற்றியவர்.அபு காசிம் முகம்மட் பணிஓய்வு பெற்றதை அடுத்து அவர் ஆகஸ்ட் முதல் நாள் எம்ஏசிசி தலைவராக நியமிக்கப்பட்டார். 2021 ஜூலை 31வரை அவர் அப்பதவியை வகிப்பார்.
கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்! சட்டத்துக்குப் “புறம்பாக” போனீர்களோ அப்புறம் புறமுதுகிட்டு ஓடவேண்டும்!