பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி அவரது சொத்து விவரத்தை பகிரங்கமாக அறிவித்தது அவருக்குப் பாதகமாக அல்லாமல் சாதகமாக அமைந்தது.
சமூக ஊடகங்களில் அவரது புகழ் கூடியது. பிஎன் ஆள்கள்கூட அவரைப் பாராட்டினார்கள்
அது மட்டுமல்லாமல், அதற்கு முன்பு தம்மிடம் உதவி கேட்டு வந்தவர்கள் தம் நிதிநிலை தெரிந்த பின்னர் தம்மை நாடி வருவதை நிறுத்திக் கொண்டார்கள். அதற்குப் பதிலாக நன்கொடைகள் குவிந்தன என்றாரவர்.
“அவ்வப்போது சாதாரண குடிமக்கள் என் சேவை மையத்துக்கு உதவி கேட்டு வருவதுண்டு. என்னுடைய நிதிநிலையை அறிந்ததும் அவர்கள் எனக்காக வருந்தினார்கள்”, என்று ரபிசி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
எனவே, சொத்து விவரத்தை அறிவிப்பது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆபத்தாக முடியும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறியிருப்பது சுத்த அபத்தம் என்றாரவர்.
அவருக்கு அது ஆபத்தாக முடியும் என்று தான் சொன்னார்! உங்களை அவர் சொல்லவில்லை!
நம் நாட்டில் முதன் முதலாக தனது சொத்து விபரங்களை வெளிப்படையாக அறிவித்தவர், சுங்கை சிப்புட் MP டாக்டர் மைக்கல் ஜெயக்குமார். அவருக்கு தலை வணங்குகிறேன். பிரச்சினை என்று ஏதாவது வந்தால்மட்டுமே, ஹீரோக்கள் வெளியே வந்து தலையை காட்டுவார்களோ? [நான் ராபிசியை குறை கூறவில்லை]