பெர்சே 3 பேரணியின்போது ஏற்பட்டதாகக் கூறப்படும் சேதங்களுக்காக அரசாங்கமும் போலீசும் 2012 அமைதிப் பேரணிச் சட்ட(பிஏஏ)த்தின்கீழ் இழப்பீடு கோர முடியாது என்பதை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது.
இழப்பீடு கோர முடியாது என்பது ஏற்கனவே கோலாலும்பூர் உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்புதான். அந்தத் தீர்ப்பை நிலைநிறுத்திய முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு, அப்போதைய பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் உள்பட பெர்சே இயக்கக் குழுவுக்கு எதிராக போலீசும் அரசாங்கமும் செய்திருந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.
முறையீட்டைத் தள்ளுபடி செய்வதென்பது நீதிபதிகள் மூவரும் ஏகமனதாக எடுத்த முடிவாகும். நீதிபதி ரொஹானா யூசுப் இழப்பீடு கோருவதற்கு அமைதிப் பேரணிச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்று கூறினார்.
நீதிபதி ரொஹானாவுடன் நீதிபதி வர்கீஸ் ஜார்ஜ் வர்கீஸ், நீதிபதி மேரி லிம் ஆகியோரும் மேல்முறையீட்டை விசாரித்தனர்.
இங்கு மட்டும் நீதிபதிகள் மலாய், சீனர், இந்தியர் என்று மூன்று இனத்தவரும் இருக்கின்றனர். ஆனால் இஸ்லாம் வழக்கு என்று வரும் பொது மட்டும் மூவருமே இஸ்லாமியர். கேட்டால் நீதிபதிகள் பற்றாக்குறை!
இந்த வழக்கிலாவது உருப்படியான தீர்ப்பை வழ்ங்கினார்களே வாழ்த்துக்கள்…