அவுஸ்திரேலியா அருகே ஒரு வாரமாக தீவில் தனியாக சிக்கி தவித்த தம்பதிகள் ஆபத்தில் சிக்கியுள்ளோம் என மணலில் எழுதி வைத்திருந்ததை கண்டு விமான படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
Linus மற்றும் Sabina Jack என்ற தம்பதி கடந்த 17 ஆம் திகதி மைக்ரோனிசியா நாட்டில் உள்ள weno என்ற தீவிற்கு படகில் சென்றுகொண்டிருந்த பொழுது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மேற்கொண்டு செல்ல முடியாமல் அருகிலிருந்த ஒரு தீவை அடைந்தனர்.
இந்நிலையில், ஒரு நாள் கடந்தும் அவர்கள் கரை திரும்பாததை அறிந்த மைக்ரோனிசிய தேசிய கடல்சார் பொலிஸ் மற்றும் அமெரிக்க கடலோர காவல்படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதற்கிடையில், உதவி கிடைப்பதற்கு ஒருவாரமாகியதால் Linus மற்றும் Sabina Jack கடற்கரை மணலிலேயே ஒரு குடிசை அமைத்து தங்கியுள்ளனர். மேலும், உதவியை எதிர்பார்த்து அடிக்கடி கடற்கரை மணலில் sos என எழுதி வைத்திருந்தனர்.
இதனிடையே, அந்த வழியாக சென்ற கடலோர காவல்படை கப்பலுக்கு உதவி கேட்டு சமிஞ்ஞை காட்டியுள்ளனர்.
இதையடுத்து, மறுநாள் காலை விமானத்தின் மூலம் அந்த தீவினை சுற்றி தேடியதில் அவர்கள் ஆபத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும், அவர்களை மீட்க சென்ற கடலோர காவல்படை கப்பல் தீவிற்கு அருகில் செல்ல முடியாததால் சிறிய படகுகளை அனுப்பி அவர்களை மீட்டுள்ளனர்.
-http://news.lankasri.com