நிலநடுக்கத்தில் உயிரிழந்த முதலாளி: சடலத்தை விட்டு விலகாத வளர்ப்பு நாய்

dogஇத்தாலி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்த தனது முதலாளியின் சவப்பெட்டியை விட்டு விலகாமல் காத்திருக்கும் வளர்ப்பு நாயின் பாசம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

இத்தாலியில் கடந்த புதன்கிழமை அன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 281 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலநடுக்கத்தில் பலியானவர்களின் சடலங்கள் சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டு Ascoli Piceno நகரில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சவப்பெட்டிகளுக்கு அருகில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சோகத்துடன் அமர்ந்திருக்க ஒரே ஒரு சவப்பெட்டிக்கு அருகில் நாய் ஒன்று சோகத்துடன் காத்திருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர், ‘நிலநடுக்கத்தில் நாயின் உரிமையாளர் பலியாகியுள்ளதாகவும், அவரது சடலம் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியை விட்டு அந்த வளர்ப்பு நாய் விலகாமல் அமர்ந்து வருவதும்’ விசாரணையில் தெரியவந்துள்ளது.

சில மணி நேரங்கள் நிகழ்ந்த இந்த பாசப்போராட்டத்திற்கு பிறகு நாய் அகற்றப்பட்டு 34 சடலங்கள் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சனிக்கிழமையான இன்று அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் அந்நாட்டு ஜனாதிபதி பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com