பாலைவனத்தில் தங்க வேட்டையாடும் பொதுமக்கள்

goldமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைவனத்தில் தங்கம் கிடைப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.

மேற்கு ஆப்ரிக்காவின் மத்தியில் அமைந்துள்ள மோரித்தானியா நாட்டில் உள்ள பாலைவனத்தில் தான் தங்கம் கிடைக்கிறது.

இதன் காரணமாக இப்பாலைவனத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள், தங்கி தங்கத்தை தோண்டி எடுத்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் வீடு வாங்கும் அளவுக்கு தங்கம் எடுத்துள்ளனர்.

ஆனால் மோரித்தானியா செல்வதற்கு பல வித ஆபத்துகள் இருப்பதாகவும், தங்கம் தோண்டி எடுப்பதற்கு அந்நாட்டு அரசிடம் உரிமை பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாலைவனத்தின் மீது நம்பிக்கை கொண்ட அஹ்மத் என்பவர் தன் குடும்பத்துடன் இங்கு வந்து குடிபெயர்ந்துள்ளார். தங்கம் தோண்டுவதற்கான உரிமம் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்காக நூற்றுக்கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளார்.

ஒரு மாதகாலமாக தங்கியிருந்த அஹ்மத் ஆறுகிராம் தங்கம் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் அவர் இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தங்கம் கண்டுபிடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

ஆனால் இதில் இருக்கும் பொருளாதார ஆபத்துக்களை அரசு விளக்கவேண்டும் என பலர் கோரிக்கை விடுகின்றனர். இதற்கு அதிகாரிகள் தங்கம் தோண்ட அனுமதிப்பது பலரின் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

-http://news.lankasri.com