பிரித்தானியாவில் பக்கம் 3 என்று கூறினாலே அது “சன்” பேப்பரின் பக்கம் 3 என்ற பொருள்தான். அதில் தான், ஒவர் நாளும் ஒரு பெண் மேலாடை இன்றி நின்று எடுத்த புகைப்படத்தை போடுவார்கள். லட்சக் கணக்கான பெண்கள் மேலாடை இல்லாமல் தாம் எடுத்த புகைப்படத்தை சன் பேப்பருக்கு அனுப்பிவைப்பதும். சில வேளை அதனை எதேட்சையாக பெற்றோர் பார்த்து அதிர்ந்து போவதும் வழக்கம். இவ்வாறு புகைப்படங்களை அனுப்பியே பெரும் மாடல் ஆகிய பெண்களும் உள்ளார்கள். அந்த வகையில் , கிம்பரலி என்னும் பெண் மிகவும் பிரபல்யமானவர்.
இவரை பேஸ் புக் ஊடாக தொடர்பு கொண்ட பிரித்தானியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர். கிம்பரலியை ஐ.எஸ் இயக்கத்தில் இணையுமாறு கூறி அவருக்கு மூளைச் சலவை செய்துள்ளார். குறித்த பெண் சிரியாவில் உள்ள அந்த ஐ.எஸ் இளைஞரோடு தொடர்பில் உள்ளதை பிரித்தானிய உளவுத்துறையான எம்.ஐ 5 கண்டுபிடித்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் கிம்பரலியை அழைத்து விசாரணை நடத்தி, இறுதியாக கடும் எச்சரிக்கையோடு வெளியே செல்ல அனுமதித்துள்ளார்கள். மாடல் அழகிகள். செக்ஸியான பெண்களை ஐ.எஸ் அமைப்பு வளைத்துப் போட்டு. அதனூடாக வேறு ஆண்களை கவர்ந்து தமது இயக்கத்தில் இணைப்பது வழக்கம்.
அந்த நடைமுறையை பிரித்தானிய உளவுத்துறை தடுத்து நிறுத்தி வருகிறது.
-http://www.athirvu.com