என்றுமில்லாதவாறு பாரிய அணு குண்டு ஒன்றை வெடித்து- வட கொரியா உலக நாடுகளை பெரும் அச்சத்தில் தள்ளியது !

இன்றைய தினம் காலை, வடகொரியா ஒரு ரகசியமான இடத்தில் பாரிய அணு குண்டு ஒன்றை வெடிக்கவைத்து தனது பரிசோதனையை நிகழ்த்தியுள்ளது. பாரக் ஓபாமா ஆசியா நாடுகளில் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு வீமானத்தில் புறப்பட்டு சுமார் 5 நிமிட நேரத்தில் வட கொரியா இந்த பாரிய அணு குண்டை வெடிக்கவைத்து மீண்டும் உலக நாடுகளை அச்சத்தினுள் தள்ளியுள்ளது. வட கொரியாவில் வெடித்த அணு குண்டால் 5.3 ரிக்டர் அளவு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில நடுக்கத்தை அவதானிக்கும் நிலையங்கள், முதலில் இது இயற்கை அனர்த்தம் என்றே நம்பி எச்சரிக்கை விடுத்தார்கள். ஆனால் சற்று நேரத்தில் எல்லாம், அது தான் பரிசோதித்த அணு குண்டு என்று வடகொரியா தைரியமாக அறிவித்துள்ளது.

பல உலக நாடுகள் அணு குண்டை தயாரித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் வட கொரியா தயாரித்துள்ள அணு குண்டின் மேல் உலக நாடுகள் ஏன் இவ்வளவு அச்சம் கொண்டுள்ளது என்று நீங்கள் கேட்க்கக் கூடும். ஆம் காரணம் இருக்கிறது. அது என்னவென்றால், யுரேனியன் என்னும் கதிரியக்க பொருளை மேலும் செறிவூட்டி. அதனை வைத்தே அணு குண்டை தயாரிக்கிறார்கள். இதில் சிறிய அளவை விஞ்ஞானிகள் அணு குண்டுக்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால் வட கொரியா போன்ற நாடுகள், அளவுக்கு அதிகமாக யுரேனியத்தை கலக்கிறார்கள். இதனால் வடகொரியா பாவிக்கும் அணு குண்டுகள் அதிக திறன் வாய்ந்ததாக இருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

-http://www.athirvu.com

3818f5cf00000578-3780874-image-a-53_1473399063831