அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க வழிசெய்யும் மசோதவுக்கு, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அவை ஆதரவு வழங்கியுள்ளது.
இந்தச் சட்டமூலம் அதிபரால் நிராகரிக்கப்படலாம் எனும் அச்சுறுத்தல் இருந்தாலும், பிரதிநிதிகள் அவை இந்த ஆதரவைத் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவுடனான உறவுகளை, இந்த மசோதா சட்டமானால் பாதிக்கும் என அதை எதிர்ப்பவர்கள் கூறிய நிலையிலும், கடந்த மே மாதம் அமெரிக்க மேலவையான செனட் இதற்கு ஒப்புதல் வழங்கியது.
அதிபர் ஒபாமா இந்த மசோதாவை தான் நிராகரிக்கவுள்ளதை வலியுறுத்தியுள்ளார்.
இரட்டை கோபுரத் தாக்குதல்களில் ஈடுபட்ட 19 பேரில் 15 பேர் சவுதி அரேபியப் பிரஜைகள். -BBC