ஆஸ்திரியா மற்றும் இத்தாலிய எல்லையில் அமைந்துள்ள Otztal ஆல்ப்ஸ் மலையில் 5,300 வயது மதிக்கத்தக்க ஐரோப்பிய மம்மியின் பிணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் இந்த பகுதியில் மம்மியின் பிணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த பிணம் Otztal மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இதற்கு OtZi என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மம்மியின் பிணத்தில் அதிகமான பாக்டீரியாக்கள் இருந்தது, இந்த உடலை ஆய்வு செய்வதன் மூலம் அதிகமான தகவல்கள் எங்களுக்கு கிடைக்கும்.
அவரது கழுத்துப்பகுதியில் ஒரு தடயம் இருக்கிறது. அவருக்கு பின்புறத்தில் இருந்து யாரேனும் அவரை சுட்டிருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதனை வைத்து ஆராய்ச்சியில் ஈடுபடவிருக்கிறோம் என கூறியுள்ள Angelika Fleckinger, Otzta மலைப்பகுதியில் அதிகமான மம்மிக்களின் உடல்கள் தென்படுகின்றன, எனவே சுற்றுலாப்பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
-http://news.lankasri.com