வட கொரியா தனது அணு ஆயுத சோதனை பற்றிய பல அதிர்ச்சிகரமான செய்திகளை நாளுக்குநாள் வெளிப்படுத்தி கொண்டே வருகின்றது.
இதன் அடுத்தகட்டமாக வட கொரியா தனது உயர் சக்தி ஏவுகணைகளை பாய்ச்சும் இயந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய இயந்திரம் வெவ்வேறு வகையான ஏவுகணைகளை பாய்ச்சுவதற்காக சிறப்பாக வடிவமைக்கபட்டது. எனவும் அந்நாட்டுசெய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் வட கொரியாவின் தலைவர் கிம் யோங் உன் கூடிய விரைவில் துணைக் கோளம் ஒன்றைப் செயற்படுத்துவதற்கு தயாராகும்படி விஞ்ஞானிகளையும் தொழில்நுட்பர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
-http://news.lankasri.com