சாலையின் நடுவில் காரை நிறுத்திய ஓட்டுனரை சுட்டு கொன்ற பொலிஸ்: அதிர்ச்சி வீடியோ

usaஅமெரிக்காவில் உள்ள சாலை ஒன்றின் மத்தியில் காரை நிறுத்திய கருப்பின நபர் ஒருவரை பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Oklahoma மாகாணத்தில் உள்ள Tulsa என்ற நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று போக்குவரத்து பொலிசார் வாகன பரிசோதனையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

அப்போது, கருப்பினத்தை சேர்ந்த கிறித்துவ பாதிரியாரான Terence Crutcher(40) என்பவர் காரில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, அவரது கார் எதிர்பாராத விதமாக சாலையின் நடுவில் நின்றுள்ளது. அப்போது, பாதிரியார் மீது சந்தேகம் அடைந்த பொலிசார் அவரை அழைத்து விசாரணை செய்துள்ளனர்.

விசாரணைக்கு பின்னர் பாதிரியார் தனது காரை நோக்கி நடந்துச் சென்றுள்ளார். பாதிரியாரை பொலிசார் துப்பாக்கியை ஏந்தியவாறு பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

சில நிமிடங்களுக்கு பின்னர், பொலிசாருடன் இருந்த பெண் அதிகாரி ஒருவர் திடீரென தனது துப்பாக்கியால் பாதிரியாரை சுட்டுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பாதிரியார் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் பேசியபோது, பொலிஸ் அதிகாரிகளின் உத்தரவின்படி, பாதிரியார் கைகளை உயர்த்தாமல் சென்றதால் அவரை சுட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், பொலிஸ் வாகனத்தில் உள்ள கமெராவில் பாதிரியார் தனது இரண்டு கைகளையும் உயர்த்தியவாறு நடந்து சென்றுள்ளார்.

எனினும், எதற்காக பாதிரியாரை பொலிசார் சுட்டுக் கொன்றனர் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-http://news.lankasri.com