சட்ட ஆளுமையைப் பின்பற்றாதவர் நஜிப், மகாதிர் கூறுகிறார்

 

don'taccuseசட்ட ஆளுமையைப் பின்பற்றாதவர் பிரதமர் நஜிப்தான், மக்கள் அல்ல என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறுகிறார்.

மகாதிரின் தலைமையிலான மக்கள் பிரகடனத்தை பேரரசர் ஏற்றுக்கொள்ளாததற்கு காரணம் அது அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்றவாறு இல்லாததிருப்பதுதான் நஜிப் தெரிவித்திருந்த கருத்துக்கு மறுமொழியாக மகாதிர் இவ்வாறு கூறினார்.

நாடு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை கையாள்வதற்கு அரசமைப்புச் சட்டம் பல்வேறு வழிகளைக் கொண்டுள்ளது, அவற்றில் பிரதமர் பணத்தை மோசடியாகக் கையாடல் செய்வது அடங்கும் என்றார் மகாதிர்.

மக்கள் அரசமைப்புச் சட்டப்படி நடந்துகொள்ளவில்லை என்று அறிக்கை விடுவதற்கு முன்பு அரசமைப்புச் சட்டத்தை படியுங்கள்.

நீரே சட்டத்தைப் பின்பற்றாததோடு இல்லாமல் நீதிக்கு இடையூறாக இருக்கும்போது, சட்டத்தை பின்பற்றாததற்காக மக்களை கடுமையாக கண்டிக்காதீர் என்று மகாதிர் இன்று அவரது வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.